Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இங்க தானே நின்னுச்சு… தூங்கும் போது நடந்த சம்பவம்… கையும் களவுமாக சிக்கியவர்…!!

ஆம்னி வேனை திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஜே.ஜே ரோடு பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராயக்கோட்டை பகுதியில் இருக்கும் ஒரு தங்கும் விடுதியில் தொழிலாளியான கோவிந்தராஜ் என்பவருடன் தங்கியுள்ளார். இதில் காமராஜ் ஆம்னி வேன் மூலம் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் காமராஜ் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் கோவிந்தராஜ் அவருக்கு தெரியாமலேயே ஆம்னி வேனின் சாவியை எடுத்துள்ளார்.

அதன்பின் ஆம்னி வேன் மற்றும் அதிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள துணி ஆகியவற்றை திருடிக்கொண்டு கோவிந்தராஜ் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து ராயக்கோட்டை காவல் நிலையத்தில் காமராஜ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அக்ரஹாரம் பேருந்து நிறுத்தம் அருகே சுற்றித்திரிந்த ஆம்னி வேனை மடக்கி பிடித்து விட்டனர். அதன்பின் காவல்துறையினர் கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |