அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மிகப் பெரிய டிராமா செய்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்களுடைய வாழ்வியல் முறையில், இறைநம்பிக்கையில் கை வைக்காதீர்கள். அதனால்தான் இந்த போராட்டம் முடியும்போது பத்து நாட்கள் மாநில அரசுக்கு நேரம் கொடுத்திருக்கிறோம். மக்களிடையே குரலுக்கு செவி சாய்ப்பார் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் இது நம்முடைய அமைச்சர் சேகர்பாபு அவர்களுடைய தொகுதி. இங்க தான் அவரு பொட்டு வைத்து, குங்குமம் வைத்து மக்களிடம் ஓட்டு வாங்கினார்.
எல்லாம் மக்களிடம் ஓட்டு வாங்கினார். இப்போ அவர் செய்கின்ற டிராமா மிகப் பெரிய டிராமாவாக இருக்கிறது. அரசு எங்களுடைய குரலுக்கும், மக்களுடைய குரலுக்கு செவிசாய்க்க வேண்டும். சாய்க்கவில்லை என்றால் பத்து நாட்கள் கழித்து இது மிகப்பெரிய போராட்டம் மட்டுமல்ல, அரசு ஸ்தம்பிக்கிற அளவிற்கு எங்களுடைய வேலைகள் இருக்கும், அதை அரசு பார்க்கத்தான் போகிறது.
கொரோனா ஊசியே போடாத 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை பள்ளி திறந்து பள்ளிக்கு அனுமதிக்கிறோம். ஏன் திமுகவினர் நிறைய தனியார் பள்ளிகள் நடத்துறாங்க அதற்காக இந்த அவசரமா ? திமுக குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லோருமே சென்னையிலிருந்து இண்டர்நேஷனல் பள்ளிகள் நடத்துறாங்கன்னு அவசரமா ? அதெல்லாம் கிடையாது. அவர்களுக்கு அப்படி எண்ணம் இருக்கலாம்…
ஆனால் பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை எங்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். காரணம் என்னவென்றால் எல்லா விஷயத்திலும் ஒரு சிறிய ரிஸ்க் இருக்க தான் செய்கிறது. ஆனால் முறையாக திட்டமிட்டு செய்தோம் என்றால் அந்த ரிஸ்க்கை தவிர்த்து விடலாம். சும்மா வீட்ல ஒன்றரை வருடம் குழந்தைகள் இருக்கிறார்கள், பள்ளிக்கு போகணும் என்பதற்காக தான் எங்களுடைய ஆதரவை கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.