சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மொபட்டை திருடி சென்றவர் கையும் களவுமாக பிடிபட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் வசித்து வரும் அசோக் என்பவர் தனது நண்பர் கார்த்திக் உடன் தனது மொபட்டில் முடியரசனார் சாலை பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு டீக்கடையில் இருவரும் மொபட்டை நிறுத்திவிட்டு அதன்பின் மருத்துவமனைக்கு சென்று திரும்பி வந்தனர். அப்போது டீக்கடை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட்டை காணவில்லை.
இதையடுத்து அவருடைய மொபட்டை டி.டி.நகர் சர்ச் அருகே ஒருவர் தள்ளிக் கொண்டு சென்றதை இருவரும் கண்டனர். உடனே இருவரும் சேர்ந்து அவரை கையும் களவுமாக பிடித்து காரைக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மொபட்டை திருடி சென்றவர் தேவகோட்டை அருகே உள்ள செலுகையில் வசித்து வரும் குணசேகரன் ( 58 ) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் குணசேகரன் மீது வழக்குப்பதிந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.