சாக்கு மூட்டையில் இறந்த நிலையில் இருந்த வாலிபரின் வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேளகவுண்டம்பாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் ஒரு மூட்டை கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூட்டையை பிரித்து பார்த்துள்ளனர்.
அதில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்த நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் மேற்பார்வைகள் 3 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிபடைகள் இறந்தவர் யார்? எப்படி இறந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.