சென்னை கே.கே நகரை சேர்ந்தவர் பிரித்விராஜ். இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில் பிரித்விராஜின் ஆட்டோ திருடு போயுள்ளது. இதனால் அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பிரித்விராஜ் சம்பவத்தன்று பரங்கிமலையிலிருந்து வீட்டிற்கு செல்ல ஆட்டோ ஒன்றை சவாரிக்கு அழைத்துள்ளார்.
இதையடுத்து ஆட்டோவினுள் ஏறி அமர்ந்ததும் இது தனது ஆட்டோ என்பதை பிரித்விராஜ் அறிந்து கொண்டார். இதையடுத்து வீட்டிற்கு செல்லும் வரையிலும் அமைதியாக இருந்து கொண்டார். பின்னர் வீடு வந்ததும் சத்தம் போட்டு கூச்சலிட்டு அங்கிருந்தவர்களை அழைத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் திருடனை மடக்கி பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் நகைச்சுவை கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.