வெளியில் சென்றால் அமைதியாகவும் முகக் கவசத்தை அணிந்தும் சென்று வருமாறு நடிகர் பரத் கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு முக கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது அதோடு முன்னணி பிரபலங்கள் பலர் இதையே தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் பரத் சமூக வலைதளங்களில் மக்களிடம் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது அனைவரும் அமைதியாகவும் மற்றும் கட்டாயமாக முக கவசத்தை அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்து தனது கவசம் அணிந்த புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளார் .நடிகர் பரத் இயக்குனர் ஷரங் இயக்கத்தில் நடித்து வெளியாகவுள்ள நடுவன் திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் போஸ்டர்கள் தற்பொழுது வெளியாகி ரசிகர்களிடம் பிரபலமடைந்து வருகிறது.