Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இங்க போறவங்க கிட்ட இத குடுத்தா சும்மாவா விடுவாங்க…. காவல்துறையினர் அதிரடி…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கைதிகளுக்கு போதை மாத்திரைகள் கொடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருநகரில் நடந்த பெண் கொலை வழக்கிற்காக காவல்துறையினர் 3 பேரை கைது செய்தனர். மேலும் இவர்களை திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். அப்போது இவர்கள் மூவருக்கும் காவல்துறையினர் குடிப்பதற்கு டீ வாங்கி கொடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் அந்த 3 பேரையும் பார்க்க வந்த 2 பேர் அவர்களுக்கு போதை மாத்திரை வழங்கினர். இதனை கண்டுப்பிடித்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் பிடித்து கைது செய்து, விசாரணை நடத்தி திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதற்கிடையே கைதிகள் 3 பேரை பார்க்க வந்த 2 பேரில் ஒருவர் மதுரையிலிருக்கும் கல்லூரியில் பயின்று வருகிறார்.

Categories

Tech |