Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இங்க மணலை ஒதுக்காதீங்க…. பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல்….. போலீஸ் நடவடிக்கை…!!

தூர்வாரும் பணியின் போது நடந்த தகராறில் பஞ்சாயத்து தலைவரை தாக்கிய குற்றத்திற்காக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுந்தரேஸ்வரபுரத்தில் பஞ்சாயத்து தலைவரான போஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த கிராமத்தில் பெய்த கனமழையின் காரணமாக தேங்கியுள்ள மழைநீர் மற்றும் மண்ணை அகற்றும் பணியினை பஞ்சாயத்து நிர்வாகத்தினர் செய்து வந்துள்ளனர். இதனையடுத்து அங்குள்ள வடக்குத்தெரு பகுதியில் பணி நடந்து கொண்டிருந்த போது சக்திவேல் என்பவரின் மகன்களான கருங்கதுரை, தங்களுடைய இடத்தில் மணலை ஒதுக்கக் கூடாது என தகராறு செய்துள்ளார்.

இதனை அறிந்த பஞ்சாயத்து தலைவரான போஸ் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது கருங்குதுரை போஸை  தகாத வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமின்றி, அவரை தாக்கியுள்ளார். இதனை தட்டி கேட்க வந்த போஸின் மகனான கார்த்திக் என்பவர் கருங்குதுரையின் தம்பியான செந்தில்குமாரை தாக்கியுள்ளார். தற்போது காயமடைந்த போஸ் மற்றும் செந்தில்குமார் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிகப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கருங்கதுரை மற்றும் கார்த்திக் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |