மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார்.
மதுரையில் நடக்கவிருக்கும் தேசிய ஜனநாயக கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள நரேந்திர மோடி மதுரை வந்துள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல திட்டம் போட்டிருந்ததால் கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்து சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பாக பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டையில் வந்தது அக்கோவிலிருந்த மக்களின் கவனத்தை ஈர்த்தது.