தமிழகத்தில் தற்போது பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனால் பெண் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற ஒரு சிலர் செய்யும் தவறுகளால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் விடுவதற்கே அஞ்சும் சூழல் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் ஆபாச படங்களை காட்டி 12 வயது சிறுமியுடன் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக ரயில் நிலைய மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். அய்யனார் கோவில் பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுமியிடம் ரயில் நிலையம் மாஸ்டர் சாகர் நாகக் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனை சிறுமி பெற்றோரிடம் கூற, பெற்றோர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ரயில் நிலைய மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.