கரூர் சிறுமி பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்ட கரூர் தங்கையின் மரணத்திற்கு காரணமானவர்களை சட்டத்திற்கு முன்பாக நிறுத்தி அதிகபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பச்சிளம் பிள்ளைகள் அடுத்தடுத்து பாலியல் கொடுமைகளால் உயிரை மாய்த்துக் கொள்வது பெரும் வேதனையும், வலியும் தருகிறது. வளரும் பருவத்திலேயே பிஞ்சுகள் உதிர்ந்து கருகுவது கண்டு மனம்வெதும்புகிறேன்.
எதுவும் செய்யவியலாது கயிறு நிலையும், பிள்ளைகளுக்கு நேரம் அவல நிலை கண்டு உள்ளம் குமுறுகிறது. பிள்ளைகளுக்கு தொடர்ச்சியாக நேரம் இக்கொடுமைகள் அவர்களின் எதிர்காலம் பாதுகாப்பு குறித்து பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. ஆகவே இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தீவிரக் கவனம் எடுத்து கரூர் தங்கையின் மரணத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனோடு போக்சோ சட்டத்தையும் கடுமையாக்க வேண்டும். அது குறித்து விழிப்புணர்வையும் பரப்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என அதில் தெரிவித்திருந்தார்.