நேற்று அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைமைக்கழக அறிவிப்பின்படி விருப்ப மனு பெறுவதற்கான இறுதி நாள் என்ற அடிப்படையில் இப்போது நீங்க பார்க்குறீங்க, எந்த அளவுக்கு ஒரு கட்சி மிகவும் எழுச்சியாக இருக்கிறது என்பது நாம் கண்கூடாக இங்க பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பொன்மண செம்மல் புரட்சித்தலைவி டாக்டர் எம் . ஜி . ஆர் . காலம் தொட்டு…. இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் காலம் தொட்டு…..
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் புரட்சி தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த மாபெரும் இயக்கம்…. புரட்சி தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட மாபெரும் இயக்கம் இன்றும்…. புரட்சித்தலைவர் காலத்தில் எப்படி இருந்ததோ அதே எழுச்சி…. அம்மா காலத்தில் எப்படி இருந்ததோ அதே எழுச்சியை நாம் இன்றைக்கும் காண முடிகின்றது.
இந்த எழுச்சியை பார்க்கும்போது தமிழ்நாட்டில் நம்முடைய பொன்மண செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அலை, அதே போல நம்முடைய புரட்சி தலைவி அம்மாவுடைய அலை வீசுகின்ற நிலையில் எதிர்கட்சிகளெல்லாம் காணாமல் போய், எல்லா தொகுதியிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் பொன்மண செம்மல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சி…. நம்முடைய புரட்சி தலைவி அம்மாவுடைய ஆட்சி தமிழ்நாட்டிலே மலரும் என்பதற்கு சான்றாக
இன்றைய தினம் நம்முடைய தலைமைக் கழகத்தில் கழக சகோதர்கள் விருப்ப மனு அளிக்கின்ற வேகத்தை பார்க்கும்போது எங்கள் சக்தியை காட்டிலும்….. இந்த இமயமலை என்ற மாபெரும் சக்தியை காட்டிலும் உலகத்தில் வேறு எந்த சக்தியும் இல்லை என்கின்ற அளவிற்கு ஒரு பெரிய அளவிற்கு ஒரு வரலாறு படைக்கப் போகின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இயக்கம்.
எனவே தான் தமிழ்நாட்டு மக்களும் சரி, அதே போன்ற அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சகோதரருடைய எண்ணமும் சரி… மீண்டும் அந்த ஒருமித்த கருத்து என்பது…. தமிழ்நாட்டில் புரட்சி தலைவர் ஆட்சி மலர வேண்டும், புரட்சி தலைவி அம்மா ஆட்சி மலர வேண்டும். இந்த இலக்கை நோக்கி தான் மக்களும் சரி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொண்டர்களும் சரி பயணித்துகொண்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார்.