Categories
சினிமா தமிழ் சினிமா

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின்…. தாயார் மரணம் – திரையுலகினர் இரங்கல்…!!

ஏ.ஆர் ரகுமானின் தாயார் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் அனைவருக்கும் தெரிந்த ஒருவர் ஆவார். இவர் ஆஸ்கர் விருதை வாங்கி வந்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர். இவர் இசை குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை இறந்துவிட்டதால் சிறுவயது முதலே அம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். இவருடைய தாயார் கரிமா. தனது அம்மா தான் தனக்கு எப்போதும் சூப்பர் ஸ்டார் என்று ஏ ஆர் ரகுமான் கூறுவார்.

மேலும் அவருடைய அம்மா மிகவும் துணிச்சலாக பெண் என்றும் ரஹ்மான் பலதடவை கூறியுள்ளார் . இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் தாயார் உடல்நலக்குறைவால் காலை உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏஆ.ர் ரகுமான் தாயாரின் இறப்பு அவருடைய குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |