Categories
சினிமா தமிழ் சினிமா

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நடித்த விளம்பர படம்… வெளியான கலக்கல் வீடியோ…!!!

பல வருடங்களுக்கு முன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடித்த விளம்பர படத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இதையடுத்து இவர் பல டாப் ஹீரோக்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்தார். மேலும் இவர் இந்தியில் வெளியான ஸ்லம் டாக் மில்லினர் படத்திற்காக ஆஸ்கார் விருதை வென்று இந்திய திரையுலகிற்கு பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரை படங்களில் பெரிதாக நடித்ததில்லை. இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் இடம்பெற்ற சிங்கப்பெண்ணே பாடலில் ஒரு சிறிய காட்சியில் நடித்திருந்தார். இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பல வருடங்களுக்கு முன் ஏர்டெல் விளம்பரப் படத்தில் நடித்த வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Categories

Tech |