Categories
சினிமா தமிழ் சினிமா

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான்….. பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா….!!!!

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் மூப்பில்லா தமிழே தாயே பாடலை பிரபல தொழிலதிபர் ஒருவர் பாராட்டியுள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமையை உணர்த்தும் விதமாக புதிய தமிழ் கீதமான மூப்பில்லா தமிழே‌ தாயே பாடலை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலை தாமரை எழுதியுள்ளார். இந்நிலையில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்த இந்த பாடலை அவருடன் சேர்ந்து சைந்தவி பிரகாஷ், ஏ.ஆர்‌ அமீன், கஜிதா, கேப்ரியல்லா செல்லஸ், பூவையார் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். இந்த மூப்பில்லா தமிழே தாயே பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்தப் பாடலை மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா பார்த்துவிட்டு ஒரு ட்வீட் செய்துள்ளார்.

அந்த டிவீட்டில் இந்தப் பாடலில் ஜாவா பைக் என்று சொல்லப்பட்டிருந்ததால் இதை முதலில் பார்த்தேன். இப்போது என்னால் பார்க்காமல் இருக்க முடியாது. அருமையான இசை மற்றும் வீடியோ @arrahman என தெரிவித்துள்ளார். மேலும் ஆனந்த் மஹிந்திரா திறமைசாலிகளை பாராட்டுவது மட்டுமில்லாமல் அவர்களுக்கு உதவிகளையும் செய்து வருகிறார். இதன்காரணமாக அவரை பலருக்கும் பிடிக்கும்.

Categories

Tech |