மலையாளத்தில் புகழ்பெற்ற யேசுதாஸ் ஆரம்பத்தில் ஒரு சில பாடல்களை தமிழ் திரைப்படங்களில் பாடியிருந்தாலும் 1974 ஆம் ஆண்டு ‘உரிமைக்குரல்’ என்ற திரைப்படத்தில் அவர் பாடிய “விழியே கதை எழுது” என்ற பாடல் அனைவரையும் கவர்ந்தது. எம்ஜிஆர் நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ என்ற திரைப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் அவர் பாடி தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.
அத்திரைப்படத்தில் “போய் வா நதியலையே” மற்றும் “ஒன்றே குலமென்று பாடுவோம்” என்ற பாடல்கள் இன்றும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். ‘நீதிக்கு தலைவணங்கு’ என்ற திரைப்படத்தில் “இந்த பச்சைக்கிளிக்கொரு” , ‘டாக்டர் சிவா’ திரைப்படத்தில் “மலரே குறிஞ்சி மலரே”, அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தில் “தெய்வம் தந்த வீடு” போன்ற பாடல்கள் யேசுதாஸை தமிழ் திரை உலகில் மிகவும் பிரபலமாக்கியது.
“தண்ணீர் தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்”, “நம்தம் நம்தனம் நம்தனம்”, “பூவே செம்பூவே”, “தென்பாண்டி தமிழே”,”ஆராரிரோ பாடியதாரோ”, “தென்றல் வந்து என்னை தொடும்”, “ராஜராஜ சோழன் நான்”, “செந்தாலும் பூவில்”,” அதிசய ராகம்”,” பூங்காற்று புதிதானது”, “கல்யாண தேன் நிலா” போன்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.