இசையமைப்பாளார் யுவன் சங்கர்ராஜா மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரன் இருவருடைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா, இவர் முன்னணி திரைப்பட நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களை வைத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அதன் தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பணியாற்றி ரசிகர்களுக்குகிடையே பிரபலமாகியுள்ளார். தொடர்ந்து பல திரைப்படங்களில் தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசையின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளார். இத்தகைய பிரபலமான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரனுடைய சிறுவயது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.