ஆதிகேசவ பெருமாளை தரிசனம் செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனால் சாமியை தரிசனம் செய்வதற்காக தினம் தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி சாமியை தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது. இந்த கோவிலில் பெருமாளுக்கு நடைபெறும் பூஜைகள் பஞ்சவாத்தியம், நாதஸ்வரம் போன்ற இசை கருவிகள் இல்லாமல் நடைபெறுகிறது. எனவே இதற்கான இசைக்கலைஞர்களை அறநிலைத்துறை உடனடியாக நியமிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.