Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இஞ்சிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை ….!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் இஞ்சி அறுவடை தொடங்கி உள்ள நிலையில் உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலைமலை கோடிபுரம், நெய் தாலாபுரம், முதீயநூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஏக்கரில் இஞ்சி சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. அறுவடை செய்யப்பட்ட இஞ்சியை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் மொத்த இஞ்சியும் அப்படியே தேங்கி உள்ளது. கொரோனா நெருக்கடி காரணமாக வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாததாலும், வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்பதாலும், பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |