Categories
தேசிய செய்திகள்

இடஒதுக்கீடு சட்டம்: இது நியாயமானதாக இல்லை…. தி.மு.க சார்பாக உச்சநீதிமன்றத்தில் வாதம்….!!!!

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ரிட்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான 3வது நாள் விசாரணை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. இவற்றில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக மூத்தவக்கீல் பி.வில்சன் முன் வைத்த முக்கியவாதத்தில் “பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் 103வது சட்ட திருத்தம் அரசியலமைப்பு சாசனத்தை மீறியதாகும்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் நியாயமானதாகவும் இல்லை, ஏற்கக்கூடிய வகையிலும் இல்லை. சமூக பின் தங்கிய நிலையை வரையறுக்க பொருளாதார அம்சத்தை கருத்தில்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஜனாதிபதியே கோயிலுக்குள் நுழைய முடியாதநிலை நிலவுகிறது. தீண்டாமையை ஒழிக்கும் சட்டம் இருந்தாலும்கூட சமூகத்தில் தீண்டாமை நிலவுகிறது.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கல்வியிலும், சமூகத்திலும் நலிவுற்ற நிலையிலும், எளிதில் சுரண்டலுக்கு ஆளாகும் நிலையிலும் இருக்கின்றனர். இதன் காரணமாக தான் அரசியலமைப்பு சாசனம் 46வது பிரிவு நலிவுற்ற நிலையிலுள்ள தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரின் கல்வி, பொருளாதார நலன்களை சிறப்பு கவனம் செலுத்தி மேம்படுத்த வேண்டும் எனவும் சமூகஅநீதி, அனைத்து வகையான சுரண்டல்களிலிருந்து அவர்களை பாதுகாக்கவேண்டும் எனவும் கூறுகிறது. சமத்துவத்தை பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சட்டம் பாதிக்கிறது” என அவர் கூறினார்.

Categories

Tech |