தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். அதேபோல் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களும் அடுத்து எந்த பாடப் பிரிவு எடுத்து படிப்பது என்று முடிவெடுத்து வருகின்றனர்.
11ம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை, மதிப்பெண் அடிப்படையில் நடைபெற வேண்டும். இட ஒதுக்கீடு முறை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து இடஒதுக்கீடு முறையை கடைபிடிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை, நடைமுறைக்கு ஒத்துவராத ஒரு உத்தரவை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளதாக ஆசிரியர்கள் அனைவரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.