Categories
மாநில செய்திகள்

இடஒதுக்கீட்டு கொள்கை…. சமூக நீதி குறித்த புத்தகம்….  வெளியான அரசாணை….!!!

தமிழ்நாடு அரசு சார்பில் இட ஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூக நீதி குறித்த புத்தகம் தயாரிப்பதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இட ஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூக நீதி குறித்து வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் புத்தகம் வெளியிட தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இந்த புத்தகத்தை தயாரிக்க கல்வியாளர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், இட ஒதுக்கீடு தொடர்பான வல்லுநர்கள், பிற்படுத்தப்பட்டோர் நல ஆர்வலர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவை அமைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இவர்கள் தலைமையில் விரைவில் புத்தகம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் புத்தகம் வெளியிடுவதற்கான நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |