Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இடங்கணசாலை நகராட்சியில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு”… நகராட்சி அலுவலகத்தில் மனு….!!!!!!

இடங்கணசாலை நகராட்சியில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட சின்னேரி பகுதியில் மின் மயானம் அமைக்க இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கஞ்சமலையூர், இ.காட்டூர், மெய்யனூர் மற்றும் இடங்கணசாலையைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்துக்குள் திரண்டு தலைவர் கமலக்கண்ணனிடம் மனு அளித்தார்கள்.

அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது, சின்னேரி பகுதியில் மின் மயானம் அமைத்தால் காற்று மாசுபடும், பொது மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும், மேலும் நீர்வரத்து தடைப்படும். ஆகையால் இப்பகுதியில் மின் மயானம் அமைக்க கூடாது என கோரிக்கை விடுத்திருந்தார்கள். இதையடுத்து நகராட்சி தலைவர் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றார்கள்.

Categories

Tech |