ஆரியா ராஜேந்திரனை திருவனந்தபுரம் நகரக் கழகத்தின் மேயராக உயர்த்தும் முடிவு சிபிஎம் மாவட்ட செயலகக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. ஆர்யா ராஜேந்திரன், முடவன்முகல் வார்டில் இருந்து வென்றவர் ஆவார். ஆர்யா, சிபிஎம்மின் குழந்தைகள் பிரிவின் மாநிலத் தலைவரும், எஸ்எஃப்ஐ மாநிலக் குழுவின் உறுப்பினருமான உள்ளார். இந்நிலையில், சிபிஎம் மாவட்டத் தலைமை திருவனந்தபுரத்தின் மேயர் பதவியை ஒரு இளைஞியின் கைகளில் ஒப்படைக்கும் புரட்சிகர முடிவை எடுத்துள்ளது.
இது குறித்து பேசிய ஆர்யா ராஜேந்திரன், “எனது தந்தை தற்போதும் கட்சியின் கிளைக் குழு உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் என்னை ஒருபோதும் கட்சிக்கு செல்லச் சொல்லவில்லை. அவர் கட்சியை நேசிக்கும் ஆத்மாத்தமாக நேசிக்கும் ஒரு நபர். மேலும் நான் எப்போதும் இடதுசாரி என்று நம்புகிறேன். எங்களது சித்தாந்தம் சரியானது, அதனால்தான் நான் கட்சியில் சேர்ந்தேன். திருவனந்தபுரத்தின் வளர்ச்சியை உறுதி செய்வேன்” என்றார்.