இட தகராறில் பெண்ணை தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள அலங்காநத்தம் பாலப்பட்டி பகுதியில் கருப்பண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது 2வது மனைவி லதா அப்பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இட தகராறு காரணமாக லதாவிற்கும் கருப்பண்ணனின் முதல் மனைவியின் மருமகன் இலுப்பைமரம் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து சம்பவத்தன்று வசந்தகுமார் லதா வேலை செய்யும் செங்கல் சூளைக்கு சென்று தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வசந்தகுமார் லதாவை தாக்கி தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனை பார்ந்த அங்கிருந்தவர்கள் காயமடைந்த லதாவை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து லதா அளித்த புகாரின் அடிப்படையில் எருமைப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்துள்ளனர்.