சேலம் மாவட்டத்தில் இடத்தகறாரில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் சேர்ந்து அண்ணனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள கருமந்துறை பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி உண்ணாமலை, சின்னம்மாள் என்ற இரண்டு மனைவிகள் உள்ளார்கள். மேலும் முதல் மனைவி உண்ணாமலைக்கு சின்னதம்பி, ராஜேந்திரன் என்ற 2 மகன்களும் இரண்டாவது மனைவி சின்னம்மாளுக்கு முனியப்பன், சிவகுமார் என்ற 2 மகன்களும் உள்ளார்கள். இந்நிலையில் அண்ணாமலை தனக்கு சொந்தமான நிலத்தை நான்கு மகன்களுக்கும் பிரித்து கொடுத்துள்ளார்.
முதல் மனைவியின் மகனான சின்னதம்பி அ.தி.மு.க பிரமுகராக இருந்து வந்துள்ளார். இதில் அண்ணாமலையின் முதல் மகன் அ.தி.மு.க பிரமுகரான சின்னத்தம்பிக்கு அரை ஏக்கர் புறம்போக்கு நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை அண்ணாமலை, முனியப்பன், சிவக்குமார், ஆகிய மூன்று பேரும் தங்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் படி, சின்னத்தம்பியிடம் கேட்டதற்க்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆத்திரமடைந்த அண்ணாமலை, முனியப்பன், சிவகுமார் மூன்று பேரும் ஒன்று சேர்ந்து, சின்னத்தம்பி அவரது மனைவியுடன் மொபட்டில் வந்து கொண்டிருக்கும் போது சின்னத்தம்பியை சரமாரியாக வெட்டினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சின்னத்தம்பி உயிரிழந்தார். இதற்கு காரணமான மூன்று பேரும் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடினார்கள்.
இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னத்தம்பியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சின்னத்தம்பியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தந்தை மற்றும் இரண்டு சகோதர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.