மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இடத்தை தமிழகஅரசு தந்துள்ளது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்து உள்ளர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான இடங்களை தமிழக அரசு வழங்கியுள்ளது. நிலம் வழங்க ஒத்துழைக்கவில்லை என்ற தகவல் தவறானது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நான்கு மாதங்களுக்கு முன்னரே நிலம் ஒதுக்கி விட்டோம் என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஜினி கமல் கூட்டணி வைத்தாலும் அதிமுக வெற்றி தடுக்க முடியாது. பிரைவேட் வேறு கார்ப்பரேட் வேறு என விளக்கிய அமைச்சர் பாண்டியராஜன், மின்வாரியம் தனியார் மயம் ஆகாது என தெரிவித்துள்ளார்.