Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இடத்தை விற்பதற்கு இடையூறாக இருந்ததால்…. “திமுக வட்ட செயலாளரை கொலை செய்தோம்”… கூலிப்படை தலைவன் பரபரப்பு வாக்குமூலம்..!!

4 கிரவுண்டு இடத்தை அபகரிக்க இடைஞ்சலாக இருந்ததால் திமுக வட்ட செயலாளரை கொலை செய்தோம் என்று கூலிப்படை தலைவன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னை மடிப்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி சென்னை மாநகராட்சி 188 ஆவது வார்டு திமுக வட்ட செயலாளர் செல்வம் என்பவரை கூலிப்படையினர் கொலை செய்துள்ளனர். இதையடுத்து கொலை செய்தவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பரங்கிமலை துணை கமிஷனர் பிரதீப் தலைமையில் அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட  தனிப்படையினர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகில் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த விக்னேஷ், கிஷோர் குமார், நவீன், சஞ்சய், புவனேஸ்வர் ஆகிய 5 பேரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளனர். இது குறித்து அவர்களிடம் விசாரித்த போது வியாசர்பாடி பகுதியை சேர்ந்த கூலிப்படை தலைவன் 30 வயதான முருகேசன் என்பவர் தான் திமுக வட்டச்செயலாளர் செல்வத்தை கொலை செய்ய சொன்னார் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அம்பத்தூர் பகுதியில் தலைமறைவாக இருந்த கூலிப்படை தலைவன் முருகேசனை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து  நடத்திய விசாரணையில் அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம், மடிப்பாக்கம் குபேரன் நகரில் 4 கிரவுண்டு நிலம் கோட்பாரற்று கிடந்த நிலையில், அதனை மதுரை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி முத்து சரவணன், பாபு அண்ணன் ஆகியோர் அபகரிக்க முயற்சி செய்தனர். அப்போது அவர்களுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் என்னிடம் நீ அந்த இடத்தை விற்று எங்களுக்கு 50 லட்சம் கொடுத்தால் போதும்  மிச்சமுள்ள ஒரு கோடி ரூபாயையும் நீயே  வைத்துக்கொள் என்று சொன்னார்கள்.

உடனே அந்த இடத்தை விற்க நான் முயன்ற போது அதற்கு செல்வம் இடையூறாக இருந்தார். அதனால் செல்வத்தை திட்டமிட்டு கொலை செய்தோம் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து முருகேசனை காவல்துறையினர் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் முத்து சரவணன், பாபு அண்ணனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |