Categories
மாநில செய்திகள்

“இடமாறுதல் கவுன்சிலிங்”…. தமிழக ஆசிரியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழக பள்ளி கல்வி துறையின் கீழ் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறும். அதன்படி இந்த வருட கவுன்சிலிங் ஆன்லைன் மூலம் நடக்கிறது. இந்த வருட கவுன்சிலிங்குக்கு 58 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு  பதவிகளின் அடிப்படையில் இந்த மாதம் 19ம் தேதி முதல் படிப்படியாக இடமாறுதல் கவுன்சிலிங் நடந்து வந்தது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கான கால அட்டவணை மாற்றப்பட்டு இருக்கிறது . இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இணை இயக்குனர் நரேஷ், புதிய அட்டவணை அடங்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். இந்த அட்டவணையை ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி கவுன்சிலிங்கை புகார் இன்றி நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |