திண்டிவனத்தில் சப் கலெக்டராக பொறுப்பேற்ற கட்டா ரவி தேஜா அவர்களுக்கு அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் எம்.பி. அமீத் சப் கலெக்டராக பணியாற்றி வந்தார். தற்போது இவர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது திண்டிவனம் சப் கலெக்டராக கட்டா ரவி தேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சப் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கட்டா ரவி தேஜா பொறுப்பேற்றுள்ளார். இதனால் திண்டிவனத்தில் புதிய சப் கலெக்டராக பொறுப்பேற்றுள்ள கட்டா ரவி தேஜாவுக்கு தாசில்தார் மற்றும் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.