Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இடம் இருக்கா? இல்லையா?…. இனி ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம்…. சென்னை மாநகராட்சி ஆணையர்….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

மேலும் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் மட்டுமல்லாமல் முன் களப் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் கொரோனா களப்பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையாமல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கு கூட இடம் இல்லாமல் மக்கள் அனைவரும் தவித்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மின் மயானங்களில் சடலங்களை எரிப்பதற்கு அல்லது புதைப்பதற்கு காலி இடம் இருக்கிறதா அல்லது இல்லையா போன்ற விவரங்களை ஆன்லைன் வழியாக தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சந்தீப் சிங் பேடி சென்னை நுங்கம்பாக்கத்தில் இதை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |