Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இடம் தேர்வு பண்ணியாச்சு…. புதிதாக தீயணைப்பு நிலையம் கட்டப்படுமா?… பொதுமக்கள் எதிர்பார்ப்பு…!!

கீழ்வேளூரில் 25 வருடங்களாக தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையத்துக்கு புதிதாக அரசு கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள  கீழ்வேளூர் தெற்கு வீதியில் 1996 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தீயணைப்பு நிலையம் தனியார் கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தாசில்தார் அலுவலகம் எதிரில்  உள்ள தனியார் வாடகை கட்டிடத்தில் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த தீயணைப்பு நிலையம் கடந்த 25 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் தான்  செயல்பட்டு வருகின்றன.

இதில்  வண்டி  நிறுத்த தனியாக இடம் இல்லாததால் தீயணைப்பு நிலையத்தின் முன்பாக செட் அமைத்து வாகனத்தை நிறுத்தி உள்ளனர். இந்தப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்க இந்த தீயணைப்பு நிலையம் பெரிதும் உதவுகின்றது. இந்த தீயணைப்பு நிலையத்திற்கு சொந்தமாக அரசு இடத்தில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கு முன்பு தமிழக அரசு  பழைய கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குடியிருப்பு வளாகத்தில் தீயணைப்பு நிலைய அலுவலக கட்டிடம் கட்ட கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இடத்தை தேர்ந்தெடுத்தும்  புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கவில்லை. இதற்கு துறை ரீதியான அனுமதி வழங்க காலதாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே தீயணைப்பு நிலையத்திற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |