Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இடிக்கப்படும் 100 பள்ளி கட்டிடங்கள்…. முதற்கட்டமாக நடைபெறும் பணிகள்…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு…!!

சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததால் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் இருக்கும் அனைத்து பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 300-க்கும் மேற்பட்ட சேதமடைந்த கட்டிடங்கள் கணக்கிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 100 பள்ளிகளில் சேதமான கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாஸ்கரன், புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரி மஞ்சுளா போன்றோர் கட்டிடங்களை இடிக்கும் பணியினை பார்வையிட்டுள்ளனர்.

Categories

Tech |