Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த அரசு பள்ளியின் சுவர்…. போராட்டத்தில் இறங்கிய மக்கள்…. ஈரோட்டில் பரபரப்பு….!!!!

ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் மாநகராட்சி பெண்கள்  மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 6,7,8 ஆம் வகுப்புகள் அப்பள்ளியின் அருகிலேயே மற்றொரு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்கு சென்ற மாணவிகள் வந்து பார்த்தபோது பள்ளியின் பக்கவாட்டிலுள்ள சன்சைடு சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இதனை பார்த்த மாணவிகளின் பெற்றோர் பள்ளியை உடனே சீர்படுத்தி தர வலியுறுத்தி, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பள்ளியின் சுவர்கள் அனைத்தும் இடிந்துவிழும் சூழ்நிலையில் இருப்பதாகவும், மாணவர்களின் உயிர் கேள்விக்குறியாக உள்ளதாகவும் பள்ளியில் முறையாக கழிப்பறை வசதிகள் இல்லை என்றும் பெற்றோர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். மேலும் இதைக் கண்டுகொள்ள வேண்டிய மாவட்ட நிர்வாகம் அலட்சிய போக்குடன் உள்ளதாகவும் குற்றச்சாட்டினர்.

Categories

Tech |