கடலூர் மாவட்டத்திலுள்ள எஸ்.புதூரில் பயன்பாட்டில் இல்லாத கட்டடம் இடிந்து விழுந்தது. இவ்வாறு கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி வீரசேகரன், சதீஷ்குமார் என்ற 17 வயது சிறுவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதில் காயமடைந்த மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாதுகாப்பற்ற இந்த கட்டடத்தை அகற்ற ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், கட்டடம் இடிக்கப்படாமல் இருந்ததாலேயே இரண்டு சிறுவர்கள் உயிர் பறிபோனதாக ஊர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.