Categories
அரசியல்

இடிந்து விழுந்த கட்டிடம்…. அரசியல் ஆதாயம் தேட முயற்சி….. இதுவே அலங்கோலத்திற்கு காரணம் – கமல்ஹாசன்

புதிதாக கட்டப்பட்டு வந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை இடிந்து விழுந்ததற்கு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்

நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று புதிதாக கட்டப்பட்டு வந்தது. 25 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டத் தொடங்கிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மதிப்பீடு 336 கோடி. இந்த கட்டிடத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பூமி பூஜை நடத்தினார். அதனைத் தொடர்ந்து கட்டடம் கட்டுவதற்கான பணியும் தொடங்கியது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட அந்த கட்டிடம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “நாமக்கல் மருத்துவ கல்லூரி கட்டும்போதே இடிந்து விழுந்து இருக்கிறது. மக்கள் வரிப்பணம் 336 கோடி ரூபாய் உருமாறும் கோலம் இது. சட்டமன்ற தேர்தலுக்குள் கட்டி முடித்து அரசியல் ஆதாயம் தேடும் அவசரக் கோலமே இந்த அலங்கோலத்திற்கு காரணம். உயிர்காக்கும் மருத்துவமனை உருவாகும் போதே உடைந்து போயிருக்கிறது. நினைவிருக்கட்டும் நீங்களும் இப்படி தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள். நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்யாதிருங்களய்யா. மக்கள் நீதி மலர தக்க தருணம் இதுவே” என பதிவிட்டுள்ளார்.

 

Categories

Tech |