Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த சுற்று சுவர்…. பலியான 3 மாடுகள்…. அரியலூரில் சோகம்…!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக 6 பசுமாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வயல்வெளியில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ராமசாமி என்பவரின் வீட்டு சுற்றுசுவர் இடிந்து மாடுகள் மீது விழுந்ததால் சம்பவ இடத்திலேயே மூன்று மாடுகள் பரிதாபமாக விழுந்து விட்டது.

மேலும் காயமடைந்த சினை பசுவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவர் இளையராஜா மாடுகளை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |