சுவர் இடிந்து விழுந்து எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் எலக்ட்ரீசியனான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பாவும் நகரில் இருக்கும் ஒரு வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டின் பழைய சுவர் இடிந்து கிருஷ்ணமூர்த்தி மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.