தங்க சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தோனேசிய நாட்டில் அதிக அளவில் தங்க சுரங்கங்கள் அமைந்துள்ளது. இந்த தங்க சுரங்கங்களில் அந்நாட்டு அரசினுடைய அனுமதியின்றி சட்டவிரோதமாக தங்கம் வெட்டி எடுக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள கினண்டி கிராமத்தில் அமைந்துள்ள தங்க சுரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த பணியில் 20 பேர் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் மேல் கூரையானது இடிந்து விழுந்து உள்ளது.
இந்த விபத்தில் சுரங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 20 பேரும் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். இந்த பகுதியில் தகவல் தொடர்புக்கான வசதி மிகக் குறைவு என்பதால் அதிகாரிகளுக்கு நேற்று இரவு தான் விபத்து குறித்து தெரியவந்துள்ளது. இதனால் அதிகாரிகள் நேற்று இரவு அப்பகுதியில் மீட்பு குழுவினருடன் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த விபத்து நடந்து சுமார் 48 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டதால் மண்ணிற்குள் புதைந்த 20 பேரும் உயிரிழந்திருக்க கூடும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.