Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த பால்கனி…. இடிபாடுகளில் சிக்கிய பெண்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பகுதியில் சத்திவேல், ஞானசேகர், ராஜேஷ், ஆகியோருக்கு சொந்தமான இரண்டு மாடிகள் கொண்ட வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டின் முதல் மற்றும் இரண்டாவது மாடியில் இருக்கும் நான்கு வீடுகளில் சுதா மற்றும் மோகன் உட்பட நான்கு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மொட்டை மாடியின் பால்கனி திடீரென இடிந்து விழுந்து விட்டது. அப்போது முதல் மாடியில் பால்கனியில் நின்று பேசி கொண்டிருந்த சுதா மற்றும் மேகனா ஆகியோரின் மீது இடிந்த கட்டிட கற்கள் விழுந்து விட்டது. இதனால் இடிபாடுகளில் சிக்கி இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர் . இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திரு.வி.க நகர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |