திருமண மண்டபத்தின் மேற்கூரை இடிந்து 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் சுண்ணாம்பு காளை பகுதியில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென மேற்கூரையில் அமைக்கப்பட்டிருந்த பால்சீலிங் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இதனால் மணப்பெண்ணின் தாய் மற்றும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமார் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.