Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த மேற்கூரை…. சீல் வைக்கப்பட்ட குடியிருப்பு…. திருச்சியில் பரபரப்பு…!!

அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் மூதாட்டி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் கட்டிடத்தின் மேற்கூரை சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததால் வீட்டிற்குள் இருந்து வெளியே வர முடியாமல் அங்கிருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிந்து விழுந்த சுவரை அப்புறப்படுத்தியுள்ளனர்.

அதன்பின் படுகாயமடைந்த ரங்கநாயகி என்ற மூதாட்டியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த கட்டிடத்தை பயன்படுத்த தடை விதித்துள்ளனர். மேலும் குடியிருப்பின் கதவினை சங்கிலியால் பூட்டி சீல் வைத்ததுடன் காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |