Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த வீட்டு சுவர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

வீட்டின் மேல் தளசுவர் இடிந்து விழுந்ததால் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள எம். மேட்டுப்பட்டி பகுதியில் ஆட்டோ டிரைவரான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 மகள்கள் இருக்கின்றனர். இவர் தனது பழைய வீட்டை இடித்து புதிதாக வீடு கட்டுவதற்கு முடிவு செய்துள்ளார். இதற்காக கூலி தொழிலாளியான சேகர் என்பவருடன் இணைந்து முத்து வீட்டின் சுவர்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் பக்கவாட்டு சுவர்களை இடித்து கொண்டிருந்த போது வீட்டின் மேல் தள கான்கிரீட் சுவர் இடிந்து சேகர் மற்றும் முத்து மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் உயிருக்கு போராடி கொண்டிருந்த சேகரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |