நிலநடுக்கத்தில் சிக்கிய உரிமையாளர்களை காப்பாற்ற நாய் உதவி கேட்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சோகத்தை ஏற்படுத்துகிறது.
துருக்கியின் மேற்கு இஸ்மிர் மாகாணத்தின் கரை பகுதியில் இருந்து பதினேழு கிலோமீட்டர் சுற்றளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தினால் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கிய உரிமையாளரை நாய் தேடுவது போன்றும் அதன் பிறகு அவரது கையைப் பார்த்ததும் அந்த நாய் உதவி கேட்பது போன்றும் அந்த புகைப்படங்கள் உள்ளது. இந்தப் புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டதா இல்லை வேறு சம்பவத்தின் புகைப்படமா என்பது தெரியவில்லை. ஆனால் இது பார்ப்பவர்களை கண்கலங்க செய்கிறது.