Categories
மாநில செய்திகள்

இடியால் ஏற்படும் மரணங்களை குறைக்க… நடவடிக்கை வேண்டும்… சுந்தர்ராஜன் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் இடியால் ஏற்படும் மரணங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பூவுலகின் நண்பர்களின் சுந்தர்ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் புயல் வெள்ளம் காரணமாக 195 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இவற்றைவிட இடி மின்னல் தாக்கி 264 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே புயல் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களை விட இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது என்று பேரிடர் துறை அறிவித்துள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக மரணங்கள் ஏற்படுகிறது என்று பூவுலகு நண்பர்களின் சுந்தர்ராஜன் குறிப்பிட்டுள்ளார். எனவே தமிழக அரசு இடியால் ஏற்படும் மரணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |