கனமழையின் காரணமாக குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் நாகர்கோவிலில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் முக்கடல் அணையிலிருந்து நாகர்கோவில் பகுதிக்காக குடிநீருக்காக வினாடிக்கு 8.6 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.