இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த நிலையில் மூதாட்டியின் வீடு இடிந்து சேதமடைந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாடனை தாலுகா மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று இடியுடன் கூடிய பலத்தமழை பெய்துள்ளது. பூத்து கூகுடி கிராமத்தில் வசித்து வரும் பாப்பாத்தி என்ற மூதாட்டியின் வீடு மழையால் இடித்து சேதம் அடைந்துள்ளது.
இதில் அதிஷ்வசமாக பாப்பாத்தி காயங்களின்றி உயிர்தப்பியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற திருவாடனை தாசில்தார் செந்தில்வேல் முருகன், வருவாய் ஆய்வாளர் கேசவன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். மேலும் அரசின் நிவாரண உதவிகள் வழங்குவதற்காக உரிய ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.