இடி விழுந்து சேதம் அடைந்த கோபுர பொம்மைகளை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கட்ரமணசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இந்த பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது வெங்கட்ரமணசாமி கோவிலின் கோபுரத்தை மின்னல் தாக்கியது. இதில் கோபுரத்தில் இருந்த 3 பரிவார சாமி பொம்மைகள் உடைந்து கீழே விழுந்து உள்ளது. மேலும் இரவு நேரம் என்பதால் யாரும் அங்கு இல்லை.
இதனால் அசம்பாவிதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளது.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அறநிலையத்துறை அதிகாரிகள் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது. உடைந்த பொம்மைகள் அனைத்தும் மீண்டும் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.