கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெத்தானூர் கிராமத்தில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் கருங்குழி கிராமத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது உமா, பெரியம்மாள் ஆகிய இரண்டு பேரை மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பெரியம்மாளின் கணவர் கடந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்தார். இதனால் பெற்றோரை இழந்து 3 குழந்தைகளும் பரிதவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.