சாலையில் விழுந்த மர கிளையை தீயணைப்பு வீரர்கள் விரைவாக அப்புறப்படுத்தினர்.
சென்னை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்கிறது. இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மயிலாப்பூர், மெரினாவில் இருந்து அண்ணா சாலை செல்லும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையின் குறுக்கே இருந்த மரத்தின் கிளை முறிந்து விழுந்தது.
அந்த சமயம் வாகனங்கள் எதுவும் வராததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் விழுந்த மரக்கிளையை அகற்றியுள்ளனர். அதன் பிறகு அங்கு போக்குவரத்து சீரானது.